• பிரேம்ஜியை நான் காதலிக்கவில்லை.. அவர்தான் அப்படி சொல்லிக் கொள்கிறார்! - நடிகை பியா



    நடிகர் பிரேம்ஜியை நான் காதலிக்கவே இல்லை. அவராகவே என்னைக் காதலிப்பதாகச் சொல்லிக் கொண்டு, பேஸ்புக்கிலெல்லாம் எழுதி வருகிறார், என்று புகார் கூறியுள்ளார் நடிகை பியா.
    'கோவா' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பியா. இந்தப் படத்தில் பியாவுடன் பிரேம்ஜியும் இணைந்து நடித்தார்.
    அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கிசுகிசு பரவியது.
    பியாவை காதலிப்பதாக பிரேம்ஜி வெளிப்படையாகவும் அறிவித்தார். நானும் பியாவும் காதலிக்கிறோம் என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். இந்த காதல் சர்ச்சையால் பியாவுக்கு படவாய்ப்புகள் குறைந்தன.
    தனக்கு வாய்ப்பு போக பிரேம்ஜியின் இந்த அறிவிப்புதான் காரணம் என்று கருதிய பியா, இப்போது மறுப்பு வெளியிட்டுள்ளார்.
    அவர் கூறுகையில், "எனக்கும் பிரேம்ஜிக்கும் காதல் என்பதெல்லாம் பொய். இதுபோன்ற கிசுகிசுக்கள் பரவுவதற்கு பிரேம்ஜிதான் காரணம். இண்டர்நெட்டில் என்னைக் காதலிப்பதாக அவர் செய்தி வெளியிட்டதால் எனக்குத்தான் பிரச்சினையாகிவிட்டது.
    அந்த செய்தியை நீக்கும்படி பிரேம்ஜியிடம் வற்புறுத்தினேன். அதற்குள் அந்த வதந்தி பரவி விட்டது. இதனால் நான் மனஉளைச்சலுக்கு ஆளானேன். பிரேம்ஜி பற்றி வெங்கட்பிரபுவிடம் கூட புகார் கூறினேன். பிரேம்ஜியை நான் காதலிக்கவே இல்லை.
    நல்ல கதையாக தேடி வருகிறேன். இப்போதைக்கு சட்டம் ஒரு இருட்டறை படத்தில் மட்டும் நடிக்கிறேன்," என்றார்.

0 comments:

Post a Comment