
சுந்தர். சி.யின் மதகஜராஜா படத்தில் இருந்து டாப்ஸி நீக்கப்பட்டு வரலக்ஷ்மி சரத்குமார் சேர்க்கப்பட்டுள்ளதாக குஷ்பு அறிவித்துள்ளார்.
கலகலப்பு வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சுந்தர்.சி. விஷாலை வைத்து எடுக்கும் படம் மதகஜராஜா சுருக்கமாக எம்.ஜி.ஆர். இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே ஹீரோயின் பிரச்சனையாக உள்ளது.
முதலில் ராதா மகள் கார்த்திகா தான் ஒப்பந்தம் ஆனார். ஆனால் சுந்தர்.சி. தன்னிடம் தெரிவிக்காமல் திரைக்கதையை 2 நாயகிகள் இருக்குமாறு மாற்றியதால் அவர் படத்தை விட்டு விலகினார்.
இதையடுத்து 2 நாயகிகளாக டாப்ஸியும், வரலக்ஷ்மி சரத்குமாரும் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் முதலில் டாப்ஸியை மட்டும் தான் ஒப்பந்தம் செய்துள்ளனர். அதன் பிறகு என்ன ஆச்சோ, ஏது ஆச்சோ தெரியவில்லை படத்தில் இருந்து டாப்ஸியை தூக்கிவிட்டு வரலக்ஷ்மியை சேர்த்துள்ளதாக இயக்குனரின் மனைவி குஷ்பு சுந்தர் தெரிவித்துள்ளார்.
இன்னும் எத்தனை ஹீரோயின்கள் வந்து, போகப் போகிறார்களோ தெரியலையே...
0 comments: