ஹரிதாஸ் படப்பிடிப்பின் போது படகு கவிழ்ந்து கடலில் விழுந்த நடிகை சினேகாவை மீனவர்கள் காப்பாற்றினர்.
சினேகா, கிஷோர் நடிக்க 'ஹரிதாஸ்' என்ற பெயரில் புதுப்படம் தயாராகிறது. குமரவேலு இப்படத்தை இயக்குகிறார்.
ராமேஸ்வரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. நேற்று தனுஷ்கோடி அருகே கடலில் தீவு போல் உள்ள சிறிய மணல் மேட்டில் பாடல் காட்சியொன்றை படமாக்கினர். இதற்காக சினேகா, கிஷோர், இயக்குனர் குமரவேலு, ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு உள்ளிட்டோர் படகில் மணல் தீவுக்கு சென்றனர்.
கிஷோர், சினேகா பாடல் காட்சியை படமாக்கி விட்டு அனைவரும் படகில் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது சினேகா வந்த படகு அலையில் சிக்கி கவிழ்ந்தது.
அனைவரும் தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடினார்கள். இதை கண்ட மீனவர்கள் விரைந்து சென்று காப்பாற்றினார்கள்.
இதுகுறித்து இயக்குநர் குமாரவேலு கூறுகையில், "அலைகள் அதிகம் இருப்பதாகவும் மணல் திட்டில் படப்பிடிப்பு நடத்த போக வேண்டாம் என்றும் பலர் எச்சரித்தனர். அதை கேட்காமல் போய் சிக்கி கொண்டோம்.
படத்தில் நடிக்கும் சிறுவன் பிருதிவிராஜையும் நீரில் மூழ்காமல் காப்பாற்ற போராடினேன். மீனவர்கள் வந்து அனைவரையும் காப்பாற்றினர். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம். சினேகாதான் இதில் ரொம்பவே அதிர்ச்சியடைந்துவி்ட்டார்," என்றார்.
0 comments: