• கார்த்தியுடன் பிரியாணி போடப்போகும் ரிச்சா




    வெங்கட் பிரவு கார்த்தியை வைத்து எடுக்கும் பிரியாணி படத்தின் நயாகி ரிச்சா கங்கோபத்யாயவாம்.
    மங்காத்தாவை அடுத்து வெங்கட் பிரபு சூர்யாவை வைத்து தான் படம் எடுப்பதாக இருந்தது. ஆனால் சூர்யா படுபிசியாக இருப்பதால் அவரது தம்பி கார்த்தியை வைத்து பிரியாணி என்ற பெயரில் படம் எடுக்கிறார்.
    இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானபோதே படத்தின் நாயகி சமந்தா என்று கூறப்பட்டு வந்தது.
    இந்நிலையில் கார்த்தியோடு ஜோடி போடப் போவது சமந்தா இல்லை மயக்கம் என்ன, ஒஸ்தி நாயகி ரிச்சா கங்கோபத்யாய என்று தெரிய வந்துள்ளது. சமீப காலமாக கை வசம் தமிழ் படங்களே இல்லாத ரிச்சாவுக்கு இந்த படம் கிடைத்துள்ளதில் பெரு மகிழ்ச்சியாம். இருக்காத பின்ன பிரியாணி தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் அல்லவா ரிலீஸ் செய்யப்படுகிறது.
    கௌதம் மேனன் படத்தில் இருந்து விலகிய ரிச்சாவுக்கு வெங்கட் பிரபு ட்ரீட் கிடைத்துள்ளது.

0 comments:

Post a Comment