
லண்டனில் தாண்டவம் படப்பிடிப்பின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு பேப்பர்களை அள்ள அனுஷ்காவும், விக்ரமும் உதவி செய்துள்ளனர்.
இயக்குனர் ஏ.எல். விஜய் விக்ரம், அனுஷ்கா, ஏமி ஜாக்சன், லக்ஷ்மி ராய் உள்ளிட்டோரை வைத்து எடுக்கும் படம் தாண்டவம். இந்த படத்தின் பெரும்பாலான பகுதி லண்டனில் படமாக்கப்பட்டது.
இதற்காக படக்குழுவினர் லண்டனில் தங்கி படப்பிடிப்பை நடத்தினர். கதைக்காக ஒரு காட்சியில் பட்டாசுகளை வெடித்துள்ளனர். நம்ம ஊராக இருந்தால் படக் குழுவினர் பட்டாசு வெடித்துவிட்டு அந்த இடத்தை குப்பைக் காடாக போட்டுச் சொன்றாலும் ஒன்றும் இல்லை. ஆனால் வெளிநாடுகளில் அப்படி செய்ய அந்நாட்டு சட்டம் இடம் கொடுக்காதல்லவா.
அதனால் அவர்கள் வெடித்த பட்டாசால் குவிந்த குப்பையை படக்குழுவினரே அள்ளிப் போட்டுள்ளனர். வெளிநாட்டுப் படப்பிடிப்பு என்பதால் குறைவான ஆட்களையே அழைத்துச் சென்றுள்ளனர். ஆட்கள் இல்லாததால் படத்தின் நாயகன் விக்ரமும், அனுஷ்காவும் கூட குப்பையை அள்ள உதவியுள்ளனர்.
அடடா இதுவல்லவா கடமை உணர்ச்சி....
0 comments: