• சகுனி ப்ளாப் படமா... யார் சொன்னது? - கேட்கிறார் கார்த்தி




    சகுனி படத்துக்கு கொஞ்சம் அப்படி இப்படி விமர்சனம் வந்தது உண்மைதான். ஆனால் அந்தப் படம் ப்ளாப் என்று சொல்வதை ஒப்புக் கொள்ளமாட்டேன். வசூல்ரீதியாக படம் நன்றாகப் போனது," என்றார் நடிகர் கார்த்தி.
    சென்னையில் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடிய கார்த்தியிடம், சகுனி தோல்விப் படம்தானே என்று கேட்டனர்.
    உடனே இதை மறுத்த கார்த்தி, "இன்றைய அரசியல் சூழலை மையமாக வைத்து லைட்டாக ஒரு படம் எடுத்தோம். அது நன்றாகவே மக்களிடம் ரீச் ஆனது. ஆனால் சிலரது எதிர்ப்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை போலிருக்கிறது. அதனால் படம் குறித்து எதிர்மறையாகப் பேசினார்கள். ஆனால் நாங்கள் நினைத்தது நடந்தது. வியாபார ரீதியிலும் வெற்றி, மக்களைச் சேர்ந்த விதத்திலும் வெற்றிதான்," என்றார்.
    அடுத்து நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் மற்றும் பிரியாணி படங்களில் இன்னும் அதிக கவனம் செலுத்தப் போவதாக அவர் தெரிவித்தார்.


0 comments:

Post a Comment