• கும்கி இசை வெளியீட்டு விழா... ரஜினி தந்த திடீர் இன்ப அதிர்ச்சி!




    கும்கி ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் - கமல்ஹாஸன் பங்கேற்பார்கள் என்றுதான் ஆரம்பத்தில் சொல்லப்பட்டது.
    ஆனால் ரஜினி வரமாட்டார். கமல் வெளியிட சூர்யா பெற்றுக் கொள்வார் என்று கூறினர். அழைப்பிதழிலும், அப்படித்தான் அச்சிடப்பட்டிருந்தது.

    ரஜினியைப் பார்க்க வேண்டும் என ஆவலுடன் இருந்த பலருக்கும் பெருத்த ஏமாற்றம்.
    ஆனால், இன்று விழா துவங்கும் முன்பே, சத்யம் அரங்கில் எந்த சந்தடியும் இல்லாமல் அமைதியாக வந்து அமர்ந்துவிட்டார் சூப்பர் ஸ்டார்.
    ரஜினி வந்துவிட்டார் என்று தெரிந்த கணமே, பதறியடித்துக் கொண்டு ஓடி வந்த பிரபுவும், இயக்குநர் லிங்குசாமியும் அவரை கைப்பிடித்து அழைத்துச் சென்று நடுநாயகமாக அமரவைத்தனர்.

    விழாவில் தன் வருகைப் பற்றிப் பேசிய ரஜினி, வரவேண்டாம் என்றுதான் முதலில் முடிவெடுத்திருந்தேன். ஆனால் மனசு கேட்கவில்லை. இந்த விழாவில் நான் கலந்து கொள்ளாமல் இருப்பது சரியல்ல என்று தோன்றியதால் வந்துவிட்டேன்," என்றார்.

0 comments:

Post a Comment