
1982-ல் எஸ்.ஏ.சந்திரசேகரன் டைரக்ஷனில், விஜயகாந்த் நடித்து வெளியான படம், சட்டம் ஒரு இருட்டறை. இந்த படம் தெலுங்கில் சிரஞ்சீவியின் நடிப்பிலும், மலையாளத்தில் கமல்ஹாசன் நடிப்பிலும், இந்தியில் அமிதாப்பச்சன்-ரஜினிகாந்த் நடிப்பிலும், கன்னடத்தில் சங்கர்நாக் நடிப்பிலும் வெளியாகி இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.
இதே படம், `சட்டம் ஒரு இருட்டறை பாகம்-2' என்ற பெயரில் மீண்டும் தயாராகி வந்தது. இப்போது இந்த படத்தின் பெயர், `தோழன்' என்று மாற்றப்பட்டு இருக்கிறது. கதை, திரைக்கதையில் இன்றைய சூழலுக்கேற்ப சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதில் கதாநாயகனாக தமன்குமார் அறிமுகம் ஆகிறார். இவருடன் ரீமாசென், பியா, பிந்து மாதவி ஆகிய மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ரீமாசென் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.
லயோலா கல்லூரியில் விஷுவல் கம்ïனிகேஷன் படித்துள்ள சினேகா பிரிட்டோ, நடிகர் விஜய்யின் உறவினர். கடந்த 3 வருடங்களாக எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி டைரக்டராக பணியாற்றிய இவர், இந்த படத்தின் மூலம் டைரக்டர் ஆகிறார். விஜய் ஆன்டனி இசையமைக் கிறார். எஸ்தல் எண்டர்டெயின்மென்ட் சார்பில் விமலா பிரிட்டோ தயாரிக் கிறார். எஸ்.ஏ.சந்திரசேகரன் மேற்பார்வையில் படம் தயாராகி வருகிறது.
கதையின் ஒரு பகுதி ஹாங்காங்கில் நடப்பது போல் அமைந்துள்ளதால், அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
0 comments: