• 6 வருட பிரிவுக்குப்பின் சிலம்பரசன்-நயன்தாரா மீண்டும் ஜோடி சேருகிறார்கள்




    சிலம்பரசனும், நயன்தாராவும் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த `வல்லவன்' என்ற படத்தில் முதன்முதலாக ஜோடி சேர்ந்தார்கள். அந்த படத்தின் படப்பிடிப்பின்போது இருவரும் நெருங்கிப் பழகினார்கள். அதைத்தொடர்ந்து இரண்டு பேருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

    இருவரும் திருமணம் செய்து கொள்கிற அளவுக்கு நெருக்கம் ஆனார்கள். இந்த நிலையில், அவர்களின் காதல் திடீரென்று முறிந்து போனது. சிலம்பரசனை விட்டு நயன்தாரா பிரிந்தார்.

    அதன்பிறகு நயன்தாரா, விஜய் ஜோடியாக பிரபுதேவா டைரக்ஷனில், `வில்லு' படத்தில் நடித்தார். அப்போது நயன்தாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே காதல் பற்றிக் கொண்டது. நயன்தாராவை திருமணம் செய்து கொள்வதற்காக, பிரபுதேவா தனது மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார்.

    கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த நயன்தாரா, பிரபுதேவாவை மணந்து கொள்வதற்கு வசதியாக இந்து மதத்துக்கு மாறினார். இருவரும் கணவன்-மனைவி போல் சேர்ந்து வாழ்ந்தார்கள்.

    நயன்தாராவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும், பிரபுதேவா தனது குழந்தைகளை மறக்கவில்லை. அவ்வப்போது குழந்தைகளைப் போய் பார்த்து வந்தார். இது, நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை. அதைத்தொடர்ந்து இந்த காதலிலும் முறிவு ஏற்பட்டது. நயன்தாராவும், பிரபுதேவாவும் பிரிந்து விட்டார்கள்.

    சிலம்பரசனுடன் சந்திப்பு

    சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ஒரு விருந்தின்போது, நயன்தாராவும், சிலம்பரசனும் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது இருவரும் மனம் விட்டு பேசினார்கள். இருவருக்கும் இடையே மீண்டும் நட்பு துளிர் விட்டது.

    இதை பயன்படுத்தி சிலம்பரசனையும், நயன்தாராவையும் மீண்டும் ஜோடி சேர்த்து படம் தயாரிக்க சில பட அதிபர்கள் முயன்றார்கள். அதில், `ஒஸ்தி' படத்தை தயாரித்த மோகன் அப்பாராவ், டி.ரமேஷ் ஆகிய இருவருக்கும் வெற்றி கிடைத்து இருக்கிறது.

    இவர்கள் இருவரும் மீண்டும் சிலம்பரசனை கதாநாயகனாக வைத்து ஒரு புதிய படம் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த படத்தில் சிலம்பரசன் ஜோடியாக நடிக்க முடியுமா? என்று நயன்தாராவிடம் கேட்டார்கள். அதற்கு நயன்தாரா சம்மதம் தெரிவித்தார்.

    கே.எஸ்.ரவிகுமார்?

    சிலம்பரசனும், நயன்தாராவும் மீண்டும் ஜோடியாக நடிக்கும் படத்தை கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்வார் என்று முதலில் பேசப்பட்டது. ஆனால், இந்த படத்தை இயக்குவதற்கு கே.எஸ்.ரவிகுமார் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

    அதனால், வேறு ஒரு டைரக்டரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

0 comments:

Post a Comment