
இளையராஜாவின் ரசிகர்கள் செப்டம்பர் 1ஆம் தேதிக்காக காத்திருக்கிறார்கள். அன்று நீதானே என் பொன்வசந்தம் படத்தின் பாடல்கள் வெளியாகின்றன. பாடல்கள் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவியது. இதனை தவணை முறையில் அதிகரித்திருக்கிறார் கௌதம் வாசுதேவ மேனன்.
முதலில் யுவன் பாடிய சாய்ந்து சாய்ந்து பாடலின் ஒரு பகுதியை வெளியிட்டனர். கேட்ட அனைவரையும் அது மெய் மறக்கச் செய்தது. அடுத்து இன்னொரு பாடலின் சிறு பகுதியையும் வீடியோ கிளிப்பையும் கௌதம் வெளியிட்டுள்ளார். இளையராஜாவின் ரசிகர்களுக்கான சுதந்திரத் தின பரிசு.
என்னோடு வாவா என்று சொல்ல மாட்டேன்....
என்னைவிட்டு வேறெங்கும் போக மாட்டேன்...
தொடக்க வரிகளிலேயே நம்மை பாடலுக்குள் இழுத்துச் செல்லும் மாயத்தை இந்தப் பாடல் கொண்டிருக்கிறது. படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பை இந்தப் பாடல் தீவிரப்படுத்தியிருக்கிறது என்றால் மிகையில்லை.
.
0 comments: