• வளர்ற புள்ளைங்களுக்கு இடையூறா..''போட்டி வேணாம்... பெருந்தன்மை ரஜினி



    ரஜினியின் சிவாஜி படத்தை 3டி வடிவத்தில் உருவாக்கி அதை மீண்டும் கமகமவெனரிலீஸ் செய்யவிருக்கிறார்கள். ஏவிஎம்-ன் இந்த முயற்சி முக்கால்வாசி முடிந்துவிட்டது. படத்தை பார்த்த ரஜினி கைதட்டி சந்தோஷப்பட்டாராம். ரஜினியின் முதல் 3டி படம் கோச்சடையானாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்களாம் ரஜினியின் மனைவியும், மகளும்.


    ஆனால் ஏ.வி.எம் -ன் இந்த முயற்சியை எப்படி தடுத்து நிறுத்த முடியும்? அதனால் கண்டும் காணாமல் விட்டுவிட்டார்கள். இதற்கிடையில் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாமே என்று சில விநியோகஸ்தர்கள் ஆசைப்பட்டார்களாம். சூர்யாவின் மாற்றானும், விஜய்யின் துப்பாக்கியும் அதே நேரத்தில் வரப்போகிற தகவலை அறிந்த ரஜினி, நாம எதுக்கு வளர்ற புள்ளைங்களுக்கு இடையூறா இருக்கணும்? தீபாவளிக்கு முன்னாடியே ரிலீஸ் பண்ணுங்க என்று கூறிவிட்டாராம்.

    அந்த மனசு இருக்கறதாலதான் அவரு அண்ண்ண்ண்ண்ணாமலேய்!

0 comments:

Post a Comment