
நடிகை ஸ்ரேயா அரை நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். அவரது படங்கள் பத்திரிகையில் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சினிமா வாய்ப்புக்காகவும், சக நடிகைகளின் போட்டியை சமாளிக்கவும் இவ்வாறு போஸ் கொடுத்ததாக ஸ்ரேயா அறிவித்து உள்ளார்.
சினிமாவில் நிலைக்க வேண்டுமானால் இப்படி கவர்ச்சியாக போஸ் கொடுப்பது அவசியம். ஏற்கனவே இதுபோல் ஒரு முறை கவர்ச்சியாக போஸ் கொடுத்ததால் நிறைய வாய்ப்புகள் வந்தன. இப்போது படங்கள் வரும் என்று கூறியுள்ளார்.
கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஸ்ரேயாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர். குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதவது:-
நடிகை ஸ்ரேயாவின் ஆபாச படங்கள் கலாசார சீரழிவின் உச்சம் ஆகும். உடம்பை ஆபாசமாக காட்டி சம்பாதிக்கும் நிலைக்கு அவர் வந்து விட்டார். சினிமாவில் நிலைக்கவும் சக நடிகைகள் போட்டியை எதிர் கொள்ளவும்தான் இப்படி போஸ் கொடுத்தேன் என்று அவர் சொல்வது கேலிக்கு உரியது.
நடிகர் - நடிகைகள் நடிப்புத் திறமையால் தான் சினிமாவில் நிலைத்து இருந்துள்ளனர். உடம்பை ஆபாசமாக காட்டி நிற்க வில்லை. ஸ்ரேயா நடிப்பாற்றலை வெளிப்படுத்தி சினிமாவில் நிலைத்து இருக்கலாம். உடம்பை காட்டித்தான் உயர முடியும் என்று எண்ண வேண்டாம். இதுபோல் ஆபாச போஸ் கொடுத்து இளைய தலைமுறையினர் மனதில் நஞ்சு பாய்ச்சுவதை ஸ்ரேயா நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.
.
.
0 comments: