• ரசிகர்களுக்கு கொமெடி விருந்து வைக்கும் கமல்


    விஸ்வரூபம் படத்தை முடித்து விட்டு தற்போது முழுநீள கொமெடி படமொன்றை கமல் ரசிகர்களுக்கு கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    திரையுலகில் மிகப் பெரிய படத்தை கொடுக்க உள்ள கமல், இந்த சிரிப்பு முயற்சியில் ஈடுபட உள்ளார்.


    விஸ்வரூபத்தின் எதிரொலியாக ஹாலிவுட்டுக்குள் காலடி எடுத்து வைக்கப் போகும் கமல்ஹாசன் அதற்கு முன்பாக தமிழில் ஒரு முழு நீள காமெடிப் படத்தைக் கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறார். இப்படத்தில் உலக நாயகனோடு இணைபவர் கிரேஸி மோகன்.

    கமல் நடித்த வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கிரேஸி மோகன் நடித்திருப்பார்.

    இப்படத்திற்கு பிறகு நீண்ட நாட்களுக்கு பின்னதாக இருவரும் இந்த முழுநீள கொமெடி படம் மூலம் கை கோர்க்கின்றனர்.

    அதாவது இப்படத்தின் வசனத்தை கிரேஸி மோகன் எழுதுவார் என்று தெரிகிறது. கமல்ஹாசனும், கிரேஸி மோகனும் இணைந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் கொமெடிப் படங்கள்.

    அந்த வரிசையில் இந்தப் படத்தையும் இணைக்கும் திட்டம் உள்ளதாம்.

    இந்த முழுநீள கொமெடி படத்தை கொடுத்த பின்னரே ஹாலிவுட்டில் நுழைகின்றார் கமல்.

0 comments:

Post a Comment