• செப். 1ல் நீதானே என் பொன்வசந்தம் பாடல்கள் வெளியீடு.. பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு .




    கோடானுகோடி இசைஞானி இளையராஜா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இசை ரசிகர்களும் கூட ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நீதானே பொன்வசந்தம் படத்தின் பாடல்கள் வெளியீடு சென்னை நேரு உள்ளரங்கத்தில் செப்டம்பர் 1ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.

    ஆர்.எஸ். இன்போன்டெய்ன்மெய்ன்ட் நிறுவனம் தயாரித்து, கெளதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இசைஞானி இளையராஜா இந்தப் படத்தில் நடத்தியிருக்கும் இசைத் திருவிழா. படத்தின் பாடல்கள் குறித்த சில சாம்பிள்களை ஏற்கனவே வெளியிட்டு ரசிகர்களிடையே பெரும் குஷியைக் கிளப்பி விட்டு விட்டார் கெளதம் மேனன். இதனால் எப்பப்பா பாட்டு வரும் என்று அத்தனை பேரும் வரிந்து கட்டிக் கொண்டு காத்திருக்கிறார்கள்.

    ஜீவா, சமந்தா இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தில் இளையராஜா அழகான இசையைக் குழைத்து அமர்க்களமாக பாட்டு போட்டிருப்பதாக பேச்சு பலமாக அடிபடுகிறது.

    இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் அதாவது பாடல்கள் வெளியீடு செப்டம்பர் 1ம் தேதி சென்னை நேரு உள்ளரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. அன்று மாலை 6.30 மணிக்கு விழா தொடங்குகிறது. இதில் கெளதம் வாசுதேவ மேனன், இளையராஜா, ஜீவா, சமந்தா உள்பட அனைவரும் பங்கேற்கின்றனர்.

    படத்தின் பாடல்களை நேரடியாக மேடையில் அரங்கேற்றுகிறார் இசைஞானி.

    இந்த நிகழ்ச்சியை முழுமையாக கவர் செய்கிறது ஜெயா டிவி. வேறொரு நாளில் இந்த ஆடியோ வெளியீட்டு விழா ஒளிபரப்பு செய்யப்படும்.

0 comments:

Post a Comment