• ஹன்சிகாவுக்கு எகிறும் பிரஷர்: காரணம் யாரோ?




    சசிகலாவின் அக்கா மகன் பாஸ்கரனுக்கு ஜோடியாக நடிக்குமாறு ஹன்சிகாவுக்கு பிரஷர் கொடுக்கிறார்களாம்.
    முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழி சசிகலாவின் அக்கா மகன் பாஸ்கரன் தலைவன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிறார்.
    இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா தான் நடிக்க வேண்டும் என்று பாஸ் என்று தனது பெயரை சுருக்கியுள்ள பாஸ்கரன் விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து எடு போனை, கூப்பிடு ஹன்சிகாவை என்று அழைத்து பேசியுள்ளனர்.
    விஜய், சூர்யா என்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துள்ள ஹன்சி புதுமுகம் கூட எல்லாம் நடிக்க முடியாது என்று கூறியுள்ளார். ஏன் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் உதயநிதி ஸ்டாலின் கூட மட்டும் நடித்தீர்களே. அவரும் புதுமுகம் தானே என்று எதிர்தரப்பு மறுகேள்வி கேட்டு பிரஷர் கொடுக்கிறதாம். இதனால் எப்பொழுதும் சிரித்த முகமாக இருக்கும் அமுல் பேபி ஹன்சிக்கு பிரஷர் எகிறியுள்ளதாம்.
    இது என்னடா வம்பா போச்சு என்று விழிக்கிறாராம் ஹன்சிகா.

0 comments:

Post a Comment