
இயக்குனர் கௌதம் மேனின் படத்தில் தெய்வத் திருமகளில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கௌதம் மேனன் கடந்த 2003ம் ஆண்டு சென்னையில் ஒரு மழைக்காலம் என்ற படத்தை துவங்கி அசினை கதாநாயகியாக ஒப்பந்தமெல்லாம் செய்தார்.
ஆனால் அந்த படம் 2 முறை கைவிடப்பட்டது. இந்நிலையில் சென்னையில் ஒரு மழைக்காலத்தை தூசு தட்டி எடுத்து 'சென்னையில் ஒரு நள்ளிரவு' என்று பெயரை மாற்றி மீண்டும் துவங்கியிருக்கிறார்.
இதில் 'மைனா' புகழ் விதார்த் மற்றும் மலையாள நடிகர் அனூப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விக்ரமின் தெய்வத் திருமகளில் அறிமுகமான குழந்தை நட்சத்திரம் சாராவை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. தனது அசத்தலான நடிப்பால் தமிழக மக்களின் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்துவிட்டார் சாரா. அந்த படத்திற்கு பிறகு தமிழ் பக்கம் வராத சாராவை கௌதம் மேனன் சென்னையில் ஒரு நள்ளிரவுக்காக அழைத்து வருகிறார்.
படத்தில் சாராவுக்கு முக்கிய கதாபாத்திரமாம். சாராவை மீண்டும் திரையில் பார்க்க அனைவருமே ஆவலாக உள்ளனர் கௌதம்.
.
0 comments: