
அவ்ளோ பெரிய கமலுக்கே அவரைவிட 'அவ்ளோ பெரிய கவலை' வந்திருக்கும்!தமிழ்சினிமாவில் அவர் நடிக்காத கேரக்டர்களே இல்லை. ஆனால் அந்த குறையை அப்படியே தீராத குறையாகவே வைத்துவிட்டது 'மாற்றான்'. ஒட்டிப்பிறந்த இரட்டையர் கதையை நாம் யோசிக்கவே இல்லையே என்று கூட அவர் யோசித்திருக்கலாம். அல்லது அவர் கண்ணில் இப்படியொரு ஹாலிவுட் படம் சிக்காமல் போனதெப்படி என்று கூட நாம் கவலைப்படலாம்.
இனிமேல் அவர் ஒட்டிப்பிறந்த இரட்டையர் கதையை கையில் எடுத்தால், 'அதான் சூர்யா பண்ணிட்டாரே...' என்ற நக்கல் வரும். என்னதான் செய்யப் போகிறாரோ கமல்? அதுபோகட்டும்... நாம் சொல்ல வரும் தகவல் அதுவல்ல.
விஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமல் ஹாலிவுட் படத்தில் நடிக்க போகிறார் என்றொரு தகவல் வருகிறதல்லவா? அதில் அவருக்கு ஜோடியாக ஏழு வயது சிறுமி நடிக்கப் போவதாக இப்பவே சுவாரஸ்யத்தை கிளப்ப ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கம். அந்த கிளப்பலில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் குள்ளமாக நடிக்கப் போகிறாராம் அவர்.
'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் குள்ள அப்புவாக நடித்திருந்தார் அல்லவா? இப்படத்திலும் அதே போன்றதொரு கேரக்டரில்தான் நடிக்கவிருக்கிறாராம் கமல். இப்படியெல்லாம் கோடம்பாக்கத்தில் சந்துக்கு சந்து கிளப்பப்படும் யூகங்களை கலைஞானியே தலையிட்டு தடுத்தால்தான் உண்டு. அல்லது 'ஆமாம்' என்று ஒப்புக் கொண்டாலும் சந்தோஷம்தான்!
0 comments: