
காதலர்களாக இருந்து பிரிந்த சிம்பு - நயன்தாரா, இப்போது நண்பர்களாக மீண்டும் இணைந்தனர். நண்பர்கள் தினத்தையொட்டி இருவரும் பிரெண்ட்ஷிப் பேண்ட் கட்டிக்கொண்டனர்.
சில வருடங்களுக்கு முன் சிம்பு, நயன்தாரா காதலர்களாக இருந்தனர். கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதையடுத்து பிரபு தேவாவுடன் நயன்தாரா காதல் வயப்பட்டார். திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு அவர்கள் உறவு சென்றது. இதற்கிடையில் பிரபு தேவா தனது குழந்தைகள் மீது பாசமாக இருந்தார். இது நயனுக்கு பிடிக்கவில்லை. இன்னும் சில பிரச்னைகளும் குறுக்கிட்டதால் இருவரும் பிரிந்தனர்.
நடிப்பை விட்டு ஒரு வருடம் ஒதுங்கி இருந்த நயன்தாரா, பிரபு தேவாவை பிரிந்ததால் மீண்டும் நடிக்க வந்தார். தற்போது அஜீத் உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சிம்பு-நயன்தாரா சந்திப்பு நடந்தது. அப்போது இருவரும் மனம் விட்டு பேசினார்கள். மனக்கசப்புகளை மறந்து நண்பர்களாயினர். இது பற்றி சிம்பு கூறும்போது, ‘நயன்தாரா நல்ல மனம் படைத்தவர். நாங்கள் இருவரும் நண்பர்கள்தான். இதை யாரும் காதல் கதையாக்கிவிடாதீர்கள். தொழில் ரீதியாக இருவரும் நட்பாகியிருக்கிறோம். சகமனிதர்களாக அன்பை பரிமாறிக்கொள்கிறோம்.
சினிமா, சக நண்பர்கள், எங்களது வாழ்க்கை பற்றியும் பேசிக்கொண்டோம். இருவரும் தனிப்பட்ட வாழ்க்கையில் அமைதி பெற்றிருக்கிறோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை. அவர் இப்போது தனது பணியை தொடர்கிறார். அதற்கு எனது வாழ்த்துக்கள் என்றார். இந்த சந்திப்பை அடுத்து இருவரும் படத்தில் இணைந்து நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது சிம்பு, நயன்தாரா ஒருவர் கையில் ஒருவர் பிரெண்ட்ஷிப் பேண்டை கட்டினர். இருவரும் மீண்டும் இணைந்திருப்பதால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
.
0 comments: