
உடல் எடை குறைத்து மீண்டும் நடிக்க வந்தார் ஐஸ்வர்யாராய். 6 மாத கர்ப்பமாக இருந்தபோது கடைசியாக விளம்பர படமொன்றில் நடித்தார் ஐஸ்வர்யா ராய். குழந்தை பிறந்தபிறகு அதை கவனிப்பதிலேயே முழுநேரமும் செலவிட்டார்.
அவரது குழந்தைக்கு ஆராத்யா எனப் பெயரிட்டனர். சமீபத்தில் கேன்ஸ் பட விழாவில் அவர் பங்கேற்றபோது உடல் எடை கூடி புதிய தோற்றத்தில் இருந்தார். இதை ஒரு சிலர் விமர்சனம் செய்தனர். அதைக்கேட்டு அபிஷேக்பச்சன் கோபம் அடைந்தார். ‘ஐஸ்வர்யாராய் உடல் எடை கூடினாலும் அவர் அழகுதான். யாரும் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லைÕ என்று கண்டித்திருந்தார்.
மீண்டும் படங்களில் நடிக்க கேட்டு பாலிவுட் தயாரிப்பாளர்கள் பலர் ஐஸ்வர்யாவிடம் கால்ஷீட் கேட்டனர். அதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் கூடிய உடல் எடையை குறைப்பதற்கு உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு மெலிந்தார். இதையடுத்து நகை விளம்பர படமொன்றில் நடிக்க ஒப்புக் கொண்டார். இதற்காக அவர் போட்டோ ஷூட்டில் பங்கேற்றார்.
உடல் மெலிந்து முகத்தில் புதிய பொலிவுடன் இருப்பதை கண்டு பட குழுவினர் ஆச்சர்யம் அடைந்தனர். இதுபற்றி இயக்குனர் ஸ்ரீகுமார் கூறும்போது, ‘ஐஸ்வர்யாவுடன் நான் பணியாற்றுவது இதுதான் முதல் தடவை. சிறிய காட்சியாக இருந்தாலும் விளக்கம் கேட்டு நடித்தார். தண்ணீருக்கு அடியில் அவர் நடித்த காட்சியும் படமாக்கினேன்Õ என்றார்.
0 comments: