• யூ டியூபில் ஆர்யா, ஹன்சிகா சேட்டையைப் பார்த்த 4.5 லட்சம் பேர்




    அண்மையில் வெளியிடப்பட்ட சேட்டை பட டிரெய்லருக்கு யூ டியூப்பில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
    ஆர்யா, அஞ்சலி, ஹன்சிகா, சந்தானம், பிரேம்ஜி அமரன், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சேட்டை. இம்ரான் கான் நடித்த டெல்லி பெல்லி இந்தி படத்தின் ரீமேக்.
    ஆனால் டெல்லி பெல்லி போன்று இல்லாமல் இதை குடும்பத்தோடு சேர்ந்து பார்க்குமாறு எடுத்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது. அந்த டிரெய்லர் வெளியானதில் இருந்து தற்போது வரைக்கும் அதை யூ டியூபில் 4,45,321 பேர் பார்த்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் டிரெய்லர் வெளியான 48 மணிநேரத்திற்குள் 2,79,139 பேர் பார்த்துள்ளனர். கௌதம் மேனனின் நீ தானே என் பொன்வசந்தம் டிரெய்லரை அதிகபட்சமாக 5.5 லட்சம் பேர் யூ டியூபில் பார்த்துள்ளனர். அஜீத் குமாரின் பில்லா 2 டீசரை 5.15 லட்சம் பேர் யூ டியூபில் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    சேட்டை யூ டியூபில் தனது பலத்தை காண்பித்துவிட்டது. மெயின் பிக்சர் வந்தால் தான் படம் எப்படி என்று சொல்ல முடியும்.

0 comments:

Post a Comment