
சந்திரமுகி படத்திற்கான இரண்டாம் பாகம் உருவாகும் நேரத்தில் ரஜினி நடிக்கும் வாய்ப்பு குறைந்தால் அதில் அஜித் நடிப்பார் எனத் தெரிகிறது.
ரஜினிகாந்தின் கதாப்பாத்திரங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் வல்லமை தல அஜித்திற்கே உண்டு.
இதற்கு பில்லா சிறந்த உதாரணம் என்றே கூறலாம். இந்நிலையில் ரஜினி நடித்த சந்திரமுகி படம் 2ம் பாகமாக உருவாக உள்ளது.
ஏற்கனவே உருவான சந்திரமுகி படத்தில் சூப்பர் ஸ்டார், சரவணன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். பி.வாசு இயக்கத்தில் உருவான சந்திரமுகி படத்தை சிவாஜி பிலிம்ஸ் தயாரித்திருந்தது.
தற்போதும் இதே கூட்டணியில்தான் சந்திரமுகி- 2 உருவாக உள்ளது. ஆனால் சூப்பர் ஸ்டார் இப்படத்தில் நடிக்காத பட்சத்தில் அஜித் நடிக்க வாய்ப்பு இருக்கிறது.
ஏற்கனவே சிவாஜி பிலிம்ஸ் சார்பில் வெளியான அஜித் நடித்த அசல் படுதோல்வியை கண்டது.
இதையடுத்து பிரபுவிடம் இன்னொரு படம் சிவாஜி பிலிம்ஸ் சார்பாக நடிக்கிறேன் என அஜித் வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments: