• சிம்புவின் “லவ் பண்ணலமா” டீசர் வெளியீடு




    ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் தயாரிப்பில் சிம்பு நடித்துள்ள படம் போடா போடி.
    இப்படத்தில் கதாநாயகியாக சரத்குமாரின் மகள், வரலஷ்சுமி சரத்குமார் அறிமுகமாகியுள்ளார்.

    இவர்கள் தவிர vtv கணேஷ், ஷோபனா, மாஸ்டர் சமரத் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.


    இப்படம் இறுதிகட்ட பணியில் உள்ளது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள "லவ் பண்ணலாமா, வேணாமா" என்ற பாடல் மட்டும் வருகிற இன்று வெளியாகிறது.

    அதைத் தொடர்ந்து விரைவில் படத்தின் இசை வெளியாக உள்ளது. படத்தின் பெரும்பகுதி லண்டனிலும், பாடல்களை ஹாங்காங்கில் உள்ள டிஸ்னிலேண்ட், மக்காவு, மும்பை மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது.

    படத்தின் ஒளிப்பதிவை ஹாலிவுட் படங்களுக்கு பணியாற்றிய டங்கன் டெல்ஃபோர்ட் என்பவர் பணியாற்றியுள்ளார்.

    மிகுந்த பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் இளைஞர்களை கவரும் விதமாகவும், அதே சமயம், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படியாகவும் உருவாகியுள்ளது.



0 comments:

Post a Comment