
எப்பவுமே நாலு ஸ்டெப் முன்னால் வந்து யோசிக்கிறவர் கமல். அகஸ்மாத்தாகவே அப்படியொரு அதிர்ஷ்டம் வந்திருக்கிறது அவருக்கு. இவர் இயக்கத்தில் உருவான விஸ்வரூபம் படத்தின் நீளம், இரண்டு படங்களின் நீளத்தை தாண்டி நிற்கிறது.
பாதியை வெட்டித் தள்ளினாலும் பாதி வேஸ்ட் அல்லவா? என்ன செய்யலாம் சிந்தனையை ஓடவிட்ட கமல், அக்டோபரில் ஒரு பகுதியையும், நவம்பரில் ஒரு பகுதியையும் வெளியிட்டால் என்ன என்று யோசிக்கிறாராம். (இந்திய சினிமா வரலாற்றில் இதுவல்லவோ புரட்சி) விஸ்வரூபம் பார்ட் ஒன், விஸ்வரூபம் பார்ட் டூ என்று அடுத்தடுத் வெளிவரப்போகிறதாம் படம்(ங்கள்)
இது ஹிட்டானால் முன்னணி எடிட்டர்கள் வீட்டு குப்பை கூடைக்கெல்லாம் மவுசு ஏறும்.
.
0 comments: