
அசினை இந்தி நடிகர்களுடன் இணைத்து கிசு கிசுக்கள் வெளியாகி வருகின்றன. கஜினியில் நடித்தபோது அமீர்கானுடன் காதல் என செய்தி வந்தது. லண்டன் டிரீம்ஸ் படத்தில் நடித்தபோது சல்மான்கானுடன் நெருங்கி பழகுவதாக கூறப்பட்டது. அசினுக்கு காதல் பரிசாக சொகுசு பங்களா வீட்டையும் விலை உயர்ந்த காரையும் சல்மான்கான் வழங்கி உள்ளதாகவும் கூறப்பட்டது.
தற்போது சல்மான்கானுடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அசின் ஆவேசமாகி உள்ளார்.
அவர் அளித்த பேட்டி வருமாறு:-
என்னைப் பற்றி இந்தி பத்திரிகைகளில் தொடர்ந்து அவதூறு செய்திகள் வருகின்றன. நிறைய நடிகர்களுடன் இணைத்து கிசுகிசுக் கிறார்கள். சல்மான்கானை தீவிரமாக காதலிப்பதாகவும் செய்திகள் பரப்பப்பட்டது. சினிமாவில் இதுபோன்று கிசுகிசுக்கள் வருவது சகஜம் என்று பொறுத்துக் கொண்டேன.
ஆனால் இப்போது சல்மான்கானுடன் இணைந்து வாழ்வதாக அவதூறு செய்தி வெளியாகியுள்ளது. இதை என்னால் சகிக்க முடியிவல்லை. எனக்கும் குடும்பம் உள்ளது. அவர்கள் இந்த செய்திகளை பார்த்து மனம் உடைந்து போய் உள்ளனர். இதுபோல் ஒன்றாக சேர்ந்து வாழ நான் நினைத்து இருந்தால் சினிமாவுக்கு வந்துதான் அதை செய்ய வேண்டும் என்று இல்லை.
இந்த செய்தி என்னை ரொம்பவும் பாதித்து உள்ளது இனி நான் பொறுக்கமாட்டேன். இதுபோல் அவதூறு பரப்பினால் கோர்ட்டில் வழக்கு தொடருவேன்.
இவ்வாறு அசின் கூறினார்.
0 comments: