• மீண்டும் பள்ளிச் சீருடையில் தனுஷூ..!



    இந்தியில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ராஞ்சனா. இப்படத்தை பிரபல இயக்குனர் ஆனந்த் ராய் இயக்குகிறார்.

    தனுஷூக்கு ஜோடியாக சோனம் கபூர் நடிக்கிறார். அண்மையில் இப்படத்தின் புகைப்படம் ஒன்று வெளியானது.

    அந்தப் புகைப்படத்தில் தனுஷ், சோனம் கபூர் ஆகியோர் பள்ளிச் சீருடையில் இருந்தனர்.
    துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 3 போன்ற படங்களைத் தொடர்ந்து ராஞ்சனா திரைப்டத்திலும் பள்ளி மாணவனாக தனுஷ் நடிக்கிறார்.

    இது குறித்து இயக்குனர் கூறியதாவது:

    படப்பிடிப்பின் போது பள்ளிச் சீருடையில் இருந்த தனுஷ், சோனம் கபூர் ஆகியோரை கூட்டத்தினரால் அடையாளம் காண முடியவில்லை. இருவரையும் இச்சீருடையில் பார்க்கையில் மிகவும் இளமையாக இருந்தனர். இதனை நாம் கண்டிப்பாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்றார். இப்படம் காதலின் பின்னணியில் உருவாகி வருகிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment