• அனுஷ்காவுக்கு ஒரு நீதி.... ஆம்பிளைக்கு ஒரு நீதியா?




    அனுஷ்காவுக்கு ஒரு நீதி. ஆம்பிளைக்கு ஒரு நீதியா என்ற முணுமுணுப்பு சப்தம் கேட்கிறது கோடம்பாக்கத்தில். யூனியனை சேராத மேக்கப் மேன் ஒருவரை தனக்காக வைத்துக் கொண்டார் அனுஷ்கா. இதையடுத்து கூட்டமாக வந்த யூனியன் நிர்வாகிகள் அவரை பிடித்து உலுக்கோ உலுக்கென்று உலுக்கிவிட்டார்கள். தமிழுக்கே சுளுக்கிக் கொள்கிற அளவுக்கு வார்த்தை தடித்தது அப்போது. அழுகையும் ஆத்திரமுமாக மன்னிப்பும் கேட்டார் அனுஷ்கா.

    இந்த சம்பவத்தை அசைபோடும் சில பட முதலாளிகள், இதே யூனியன் ஆட்கள் அப்ப மட்டும் ஏன் சும்மாயிருந்தாங்க? என்று முணுமுணுக்கிறார்கள். இவர்கள் சொல்லும் அந்த 'அப்ப மட்டும்னா' விஷயம் என்னவாம்?

    பிரபல சேனல் ஒன்று உச்ச நடிகரை வைத்து ஒரு படம் எடுத்தது. அவருக்கு மேக்கப் போட்டதெல்லாம் நம்ம ஊரு யூனியனை சேராத ஒருவர்தான். சேனல் பலத்தையும் அப்போதைய ஆளுங்கட்சி என்கிற அந்தஸ்தையும் கண்டு ஒதுங்கிய இவர்கள்தான் இப்போது அனுஷ்காவை உலுக்குகிறார்கள்.

    எலி புழுக்கையும் யானை விட்டையும் ஒண்ணுதாங்கிற மனோபாவம் இங்க எப்பதான் வரப்போவுதோ?
    .

0 comments:

Post a Comment