
பகலவன் படத்தில் நடிக்கிறேன் என்று கடைசிவரை கூறி இறுதியில் சீமானுக்கு இனிமா தந்த மாதிரிகௌதமுக்கும் அவரின் யோஹனுக்கும் பேதி மாத்திரை தந்து தனது ஸ்டேட்டஸுக்கு ஒத்துப் போகும் காப்பி கேட் ஏ.எல்.விஜய்யுடன் கைகோர்த்திருக்கிறார் இளையதளபதி விஜய். இதுவும் ஏதாவது காப்பியாகதான் இருக்கப் போகிறது.
சரி, விஷயத்துக்கு வருவோம். இரண்டு விஜய்கள் சேர்ந்து செய்யும் படம் என்பதாலா தெரியவில்லை, சும்மாச்சுக்கோசரம் மூன்றாவது விஜய்யின் பெயரை இழுத்து விட்டிருக்கிறார்கள். அதாவது யேசுதாஸின் மகன் பாடகர் விஜய் யோசுதாஸ் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று செய்திகளை கசியவிட்டிருக்கிறார்கள்.
இதில் எள்ளளவும் உண்மையில்லை என்று விஜய் யேசுதாஸ் சொன்ன பிறகும் யாரும் அடங்குவதாக இல்லை. யப்பா ஏ.எல்.விஜய்... காப்பி அடிக்கப் போற படத்தோட பெயரைத்தான் சொல்லவில்லை, விஜய் யேசுதாஸ் நடிக்கிறாரா என்பதைக் கூடவா சொல்லக் கூடாது.
0 comments: