• ஓப்பனிங் வார வசூலில் அசத்திய முகமூடி..!



    எதிர்மறை விமர்சனங்கள் பல வெளியான போதிலும் படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக காணப்பட்டதனாலும் அதிக திரையரங்குகளில் வெளியானதனாலும் சென்னையில் மட்டும் முகமூடி படம் 1.60 கோடி வசூலித்துள்ளது.

    சென்னையில் மாத்திரம் 25 திரையரங்குளில் வெளியான இப்படம் முதல் மூன்று நாட்களிலும் கிட்டத்தட்ட அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடியுள்ளது.

    தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் எதிர்மறை விமர்சனங்களால் திரையரங்குகளில் கூட்டம் குறைந்துள்ளது. இருப்பினும் சென்னை விநியோகஸ்தர்களுக்கு பெரிய இலாபத்தினை ஏற்படுத்தியுள்ளது முகமூடி திரைப்படம்.

    அடுத்த ஒரு வாரத்துக்கு போட்டிக்கு படங்கள் இல்லாமையினால் இப்படத்தின் வசூல் ஓரளவு நன்றாகவே இருக்கும் என தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் நம்பிக்கையிலுள்ளனர்.

0 comments:

Post a Comment