இனிமேல் மொழிமாற்றுப் படங்களை இயக்கமாட்டேன் என்று இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார்.
ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படம் வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கின்றது.
இத்திரைப்படம் ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ் திரைப்படத்தின் மொழிமாற்றமாகும். இனிமேல் மொழிமாற்றுத் திரைப்படங்களை இயக்கமாட்டேன் என்று இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பி்ல் சங்கர் கூறியதாவது, ஹிந்தியில் தயாரான 3 இடியட்ஸ் திரைப்படத்தை தமிழில் நண்பன் பெயரில் மொழிமாற்றம் செய்தது பெரிய சவாலாக இருந்தது.
உண்மைப்படத்தின் தன்மைகள் கெடாதவாறு படத்தை எடுக்கவேண்டும் என்று விஜய்யிடம் கேட்டேன். விஜய் தனது வழக்கமான பாணியில் இல்லாமல் வித்தியாசமாக நடித்துக் கொடுத்தார்.
3 இடியட்ஸ் திரைப்படத்தை விட நண்பன் திரைப்பட பாடல்கள் நன்றாக இருந்ததாக பாராட்டினார்கள்.
மொழிமாற்றுத் திரைப்படத்தை இயக்கியது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இனிமேல் மொழிமாற்று திரைப்படங்களை இயக்கமாட்டேன்.
நான் தயாரித்து பல படங்கள் நன்றாக ஓடவில்லை. இதனால் நிறைய பணத்தை இழந்துவிட்டேன். தற்போது புதிய படம் தயாரிப்பதற்காக ஓர் நல்ல கதையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். எந்த நடிகரை வைத்து படம் இயக்குவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை.
நிறைய கதைகள் மனதில் உள்ளது, அடுத்த படம் எனது சொந்த சிந்தனைக் கதையாகவே இருக்கும். மார்ச் மாதத்தில் எனது அடுத்த திரைப்படம் பற்றி முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
0 comments: